

"தமிழ் மொழி பேசுபவர்களும் மனிதர்களே என்ற எண்ணம் சிறிலங்காவில் எப்போதோ தொலைந்துவிட்டது."
"எப்போது சமாதானமும் நீதியும் நிலைநிறுத்தப்படும்".
இதுவரை 100000 ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சிறிலங்கா அரசின் இராணுவ மற்றும் இரகசிய சதி நடவடிக்கைகளால் கொல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களை பற்றிய விபரங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் இத்தளம் உருவாக்கப்பட்டிருக்கறது. என்றோ ஒருநாள் சர்வதேச நீதிமன்றத்தின் கதவுகள் இவர்களுக்காகவும் திறந்து கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.

யாழ்ப்பாணம் சுண்டுககுளி மகளிர் கல்லுாரி மாணவியான குமாரசுவாமி கிருசாந்தி சிறிலங்கா ஆயுதப்படையாட்களால் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டார்.
பாடசாலைக்குப் பரீட்சை எழுதச் சென்ற கிருசாந்தி திரும்பி வராததை அறிந்து அவ
மேலும்

மயில்வாகனம் நிமலராஜன், யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு இயங்கிய சில பத்திரிகையாளர்களில் ஒருவர். பிபிசி போன்ற செய்தி ஊடகங்களுக்கும் பத்திரிகையாளராகச் செயற்பட்டவர். யாழ்ப்பாணத்திலிருந்து செம்மணிப் புதைகுழி படுகொலைகள் பற்றிய தகவல்களை உலகின் கவனத்திற்குக்
மேலும்

தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் கிளிநொச்சிப் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச படைகளின் கிளைமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தின்போது இவரது சாரதியும் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
[]
மேலும்


தமிழக பத்திரிகையாளர் கவிதா முரளிதரன்: இலங்கையில் தமிழர்கள் எதிர் கொள்ளும் ஆள்கடத்தல்கள்
2008-12-31 00:25:52
சமீபத்தில் இலங்கை சென்று திரும்பிய தமிழக பத்திரிகையாளர் திருமதி. கவிதா முரளிதரன், "த வீக்" டிசம்பர் 28ஆம் திகதிய இதழில், தொடரும் ஆள் கடத்தல்கள் பற்றியும், இடம் பெயர்ந்தோர் பேரவலங்கள் குறித்தும் பின்வருமாறு எழுதியுள்ளார்:
நவம்பர் 23ஆம் திகதியன்று எங்கள் வெள்ளை வான், மட்டக்களப்பிற்கு அருகாமையில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் கிராமமாகிய சாய்ந்தமருதில் தரித்த போது, அங்கு வசித்தவர்கள் எம்மை அச்சத்துடன் நோக்கினர். அப் பகுதியனை சேர்ந்த நண்பர் என்னை "சென்னையில் இருந்து வந்துள்ள ஊடகவியலாளர்" என அறிமுகம் செய்து வைத்தார்.
இலங்கை வாழ் தமிழருக்கு வெள்ளை வான் என்பது, நான்கு சக்கரத்தில் தேடி வரும் ஒர் சாவு மணி ஆகும். "வெள்ளை வான்கள் தமிழரை கடத்துவதற்கு, குறிப்பாக தமிழ் இளையோரினைக் கடத்துவதற்கு பாவிக்கப்பட்டுள்ளது", எனக் கூறினார் நண்பர்.
இவ்வாறானதொரு வானிலேயே, கடந்த ஜூனில் கொழும்பைச் சேர்ந்த மதுரா குணசிங்கம் கடத்தப்பட்டார். "எனது மகன், என்னுடைய மூத்த மகளRead More
